Wednesday, 1 February 2012

5 My Song

தேடும் முன்பே நீ வந்தாய் 
உனை தேடும்போது ஏன் சென்றாய் 
விடியலுக்காய் காத்திருக்க நேரமில்லை 
வா நடப்போம் விடியும்வரை கைகோர்த்தே 

அறியா வயதில் அதைச் சொன்னாய்
அதை அறியும் முன்பே எனை வென்றாய்

1  மனதை மனதை பிரித்தெடுத்து 
    உன் காதல் தீர்ப்பை நீ எழுது
    தினமும் தினமும் உனை நினைத்து 
    படும் அவஸ்தை அது பெரிது 

    உன் ஓரக்கண்ணாலே
    என் நெஞ்சை கொய்தையே
    ஏனென்று அறியும் முன் 
    உள்ளதை புரியும் முன்  
    என்னென்ன செய்தாயோ.... நீ உயிரே!!    (அறியா)

2  புரியா புரியா புதிராக 
    நான் நின்றேன் தினமும் புதிதாக 
    உன் பார்வை பார்வை அதில் நனைந்து 
    உன் சிரிப்பில் தினம் புதைந்து 

    உன் காதல் உயரத்தை 
    நான் இன்று கண்டேனே 
    என்னையே மறந்தேனே 
    செவ்வானில் பறந்தேனே 
     சிறகடித்தேனே .......     உன்னாலே!!!         (அறியா)

5 comments:

  1. மிகவும் நன்றாக இருந்தது...... வாழ்த்துகள் .....

    ReplyDelete
  2. விடியலுக்காய் காத்திருக்க நேரமில்லை
    வா நடப்போம் விடியும்வரை கைகோர்த்தே...

    fantastic lines...

    ReplyDelete

 

My Desires- My World- My Experience Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates